முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்- திமுக இடையியான மோதல் நாளுக்கு நாள் வலுவடடந்து வருகிறது. அவரின் சீண்டலால் முதல்வர் கருணாநிதி கடுங்கோபத்தில் உள்ளார். இளங்கோவன் பேச்சு கூட்டணிக்கு வலிமை சேர்ப்பதற்குப் பதில் வலியையே சேர்க்கும் என்று முதல்வர் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்போதுமத்திய அமைச்சர் அழகிரி கலந்துகொண்ட திருச்செந்தூர் நிகழ்ச்சியில் மூத்த திமுக தலைவர் ஒருவர் ராஜீவ் காந்தி மற்றும் ராகுல் காந்தி குறித்து கடுமையாக பேசிய சிடியை வெளியிட்டால் காங்கிரஸார் கொந்தளித்துப் போவார்கள். இது குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இளங்கோவன் கூறியுள்ளார்
திருச்செந்தூரில் மத்திய அமைச்சர் அழகிரி முன்னிலையில் திமுகவின் மூத்ததலைவர் ஒருவர் காங்கிரஸ் தலைவர்களை மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார். அதன் குறுந்தகடு எனக்கு வந்துள்ளது. அதை வெளியிட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்துப் போவார்கள்.
எனது பேச்சுகள் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் வலி ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள முதல்வர் கருணாநிதி,திருச்செந்தூர் பேச்சு பற்றி இதுவரை கருத்து கூறாதது ஏன் என்று தெரிவிக்க வேண்டும். ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் பொறுமையாக இருந்தோம். நீங்கள் யார் என்பதை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய காலம் வந்து விட்டது. இதுபோன்ற பிரச்சார கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடக்கும் என்றார்.
Source: http://www.inneram.com/201008089892/elengovans-speach-irk-dmk
No comments:
Post a Comment