Monday, August 16, 2010

எது பகுத்தறிவு ?

எது பகுத்தறிவு ?

அண்ணாவின் பெயரில் கட்சியை நடத்திக் கொண்டு ராமர் பாலத்தை

இடிக்கக் கூடாதுன்னு வழக்கு பொடறது பகுத்தறிவு இல்லன்னா,

வேற எது பகுத்தறிவு?

1. உருவ வழி பாடு, சிலை வழிபாடு, தீபாராதனை, பூமாலை எல்லாம் மூடத்தனம் என்று முழங்கிவிட்டு,
அண்ணாவிற்கும், பெரியாருக்கும் திசையெங்கும் சிலை, பூமாலை, சமாதியில் அணையா ஜோதி – இது பகுத்தறிவு.

2. சோதிடம், நம்பிக்கை, ராசி என்பது மூட நம்பிக்கை.
எப்பவும் மஞ்சள் துண்டும், தினசரி காலை தியானமும் பகுத்தறிவு.

3. ஏறக்குறைய உலகம் முழுதும் திரையிடப் பட்ட திரைப்படமான

‘ டா வின்ஸி கோட் ’, நீதி மன்றத்தால் அனுமதிக்கப் பட்டும், டெல்லியிலும் பிற இடங்களிலும் திரை இடப் பட்டும் கூட,

தமிழகத்தில் தடை. காரணம் - பிற சமயத்தினரின் நம்பிக்கைக்கும்,

உணர்வுக்கும் மரியாதை.

கோடானு கோடி மக்களின் நம்பிக்கையையும், உணர்வையும்

தகர்க்கும் ராமர் பாலம் தகர்ப்பை யாரேனும் எதிர்த்து கருத்து

கூறினால். அது மூட நம்பிக்கை. மக்களின் நம்பிக்கையை
தகர்க்க பாலத்தை உடைக்க எல்லா முயற்சியும் எடுப்பது - பகுத்தறிவு.

4. எல்லாவறிறிக்கும் ஆரம்பம் விநாயகர் வழிபாடு என்று நம்பியவரை,

‘ விநாயகர் வழிபாடு ‘ தமிழரின் பழக்கம் அல்ல. கனக விஜயனில்

தலையில் கல் சுமக்க வைத்து கொண்டு வந்தானே தமிழ் மன்னன். அது தப்பாக புரிந்து கொள்ளப் பட்டது. இது வடக்கிலிருந்து வந்த

மூடத்தனம் ’ என்று மேடைப் பேச்சு, அறிக்கை.

தான் தொடங்கும் ’ கலைஞர் டீவி’ மட்டும், விநாயகர் சதுர்த்தி தினம், பிரம்ம முஹூர்தத்தில் தொடங்க வேண்டும் - இது பகுத்தறிவு.

5. அண்ணாவின் பெயரில் கட்சி நடத்திக்கொண்டு மத உணர்வை

மதித்தால், பகுத்தறிவு புகட்டிய அண்ணாவிற்கு வெட்கக் கேடு.
‘ நான் மிக ராசி யானவன், முதன் முதலில் தொழில் தொடாங்கும்

போது நான் வாழ்த்தினால், நல்லது நடக்கும்’ – என்று பேசுவது பகுத்தறிவு

6. குல தேய்வ கோயிலுக்கு சாமி கும்பிட அமைச்சர்
போனால், காட்டுமிராண்டித்தனம்.

இஃப்தார் விருந்திற்கு தானே சென்று நோன்பு கஞ்சி
குடித்தால் - பகுத்தறிவு.

7.ராமாயணம் என்று ஒன்று நடக்கவே இல்லை.
வெறும் கட்டுக் கதை, கற்பனை - என்று கூறிவிட்டு,

திடீரென்று ’ ராவணன் ஒரு தமிழன்’ அதற்கு ஆதாரம் இருக்கிறது என
பேசுவது - பகுதறிவு

…ஆகா…ஆனந்தம் … புரிந்து கொண்டேன்…. எது பகுத்தறிவு என்று தெளிவடைந்தேன்… அற்புதம்…அபாரம்…. என்னே பகுத்தறிவு…. ஆகா…ஓகோ….
: For white board - ” பகுத்தறிவு பகலவன் ” என்று அழைக்கப் பட வேண்டும் என

ஆசைப்படும் ’ அப்பாவி தமிழன்’.

Source: http://www.manakkudiyan.com/?p=36

No comments:

Post a Comment