Sunday, August 15, 2010

இளங்கோவனை பார்த்து பயந்தார்களா ? கருணாநிதி கும்பல்


இந்தியாவிலே ஊழலில் முதலிடத்தில் இருப்பது கருணாநிதி தலைமையி -லான திமுக தான் என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை . முல்லை பெரியாறு ஆணை விவகாரத்தில் கேரளாவிற்கு ஆய்வு பணிக்கு அனுமதி கொடுக்கும் வரை கண்டு கொள்ளாமல் ( தெரியாமலிருந்தி -ருக்குமோ ) இருந்து விட்டு எதிர் கட்சிகள் போராட்டம் நடத்திய பின்னர் வேண்டா வெறுப்பாக உச்ச நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற மனு தாக்கல் செய்து வழக்கை வாதாட தெரியாமல் தமிழகத்திற்கு பாதகமான இடைக்கால தீர்ப்பை வாங்கிய பெருமை கருணாநிதிக்கே சாரும் .

மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க ஆடிய நாடகம் தான் மதுரையில் நவம்பர் ஒன்றாம் தேதி மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசை எதிர்த்து கண்டன கூட்டம் என அவசர கோலத்தில் பின் விளைவுகளை பற்றி அறியாமல் அறிவித்தார் . முசோலினி வம்சா வழியில் வந்த சோனியா விடுவாரா கடந்த முறை கூட்டு சேர்ந்து கொள்ளையடித்த ஸ்பெக்த்ராம் ஊழலை தோண்ட முடிவெடுத்து தடா புடலாக cpi ராஜாவின் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தியது . 22000 கோடி ருபாய் அளவிற்கு ராஜா அமைச்சரவையின் கீழ் ஊழல் நடந்திருப்பதாக வழக்கு பதிவு செய்ய பட்டது .

இதை பார்த்த திமுக கொள்ளை கும்பல் பயந்து போனது வண்டவாளம் எல்லாம் வெளியில் வரும் என நினைத்து . இதனிடையே போதுக்கூட்ட்டத்தில் பேசிய தமிழ் விரோதி இளங்கோவன் திமுகவின் ஊழலை எதிர்த்து காங்கிரஸ்காரர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என பேசினார் . இதை எதிர் பார்க்காத திமுக கூட்டம் அவசர அவசரமாக கண்டன கூட்டம் நடை பெறாது என்றது .

இப்படி தான் நாடகமாடி சோனியாவுக்கு பல்லாக்கு தூக்கி 2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் ஈழத்திலே சாவதற்கு காரணமாகி போனார் கருணாநிதி . ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திலே காங்கிரஸ் கட்சிக்காக அந்த திட்டத்தையே கானல் நீராக்கி மூன்று மாவட்ட மக்களின் குடிநீரில் உலை வைத்தார் . இப்போது 22000 கோடி பணத்திற்காக ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராக செயல் படுகிறார் .

தமிழகத்தின் இயற்கை துறைமுகமான குளச்சலில் துறைமுகம் ஏற்படுத்த மக்கள் விடுத்த கோரிக்கை கூட காற்றில் பறந்து கேரளா மாநிலத்திற்கு சென்று விட்டதாக தெரிகிறது .

இப்படியே நாள் முழுக்க சிந்த்தித்து தன் குடும்பத்திற்கு மட்டுமே உழைத்து கொண்டு ஒட்டு மொத்த தமிழினத்தின் எதிர் காலத்தை கேள்வி குறியாக்கிய கருணாநிதிக்கு தமிழர்கள் என்ன கைம்மாறு செய்ய போகிறார்களோ . முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளா முதல்வர் அச்சுதானந்தன் பாராட்ட வேண்டிய அளவிற்கு கருணாநிதி நடக்கிறார் என்பது கேரளா மாநில மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம் .

இதே நிலை நீடித்தால் ஒட்டு மொத்த தமிழனின் நிலை .....................

Source: http://www.sureshkumar.info/2009/10/blog-post_29.html

No comments:

Post a Comment