I consider this article tells the exact picture of DMK and its family politics. The author has simply expressed the feelings of every citizen of Tamilnadu. Thanks to him...
இலங்கையில் கொத்துக் கொத்தாக வன்னி மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது சொந்த இனம் அழிக்கப்பட்டது குறித்த எவ்வித அக்கறையும் இல்லாத சுயநல மோகி ஒருவரின் வெளிப்படாகவே சிவதம்பியின் இம்மாநாட்டு பங்கேற்பை நாம் காண வேண்டியுள்ளது
அப்படுகொலைக்கு துணை போன இந்திய மத்திய அரசோடு சேர்ந்து கொண்ட கருணாநிதி ஈழ மக்களை எள்ளி நகையாடும் வகையில் அறிக்கை விட்டதையும் போர் நடைபெறவில்லை கனரக ஆயுதங்களை இலங்கை அரசு பயன்படுத்தவில்லை என்று சொன்னதோடு மூன்று மணிநேர உண்ணாவிரதம் ஒன்றை இருந்து விட்டு போர் முடிந்து விட்டது என்று சொல்லி எழுந்து சென்ற கொடூரமான வெளிப்பாடுகளை எல்லாம் நாம் கண்டு களித்தோம். போருக்கு முகம் கொடுத்த தமிழ் மக்கள் மீது இரக்கம் காட்டாத கருணாநிதி மீது புலி ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள ஜனநாயகசக்திகள் கடும் வெறுப்புற்றனர். இந்நிலையில் தனக்கு எல்லா தரப்புகளிலுமே ஆதரவு இருக்கிறது என்பதை நிறுவ கருணாநிதி தன் அரசியல் இலக்கிய ஊடக சினிமா அல்லக்கைகளை கிளப்பி விட்டு ஆடுகிற நாட்கங்கள் அபத்தக் காட்சிகளாக நம்முன்னே காட்சிகளாக தெரிகின்றன. எந்த மொழி மனித உற்பத்தியில் பங்கெடுக்கிறதோ அந்த மொழியே மக்கள் வ்ழக்கில் நீண்ட நாள் நீடித்திருக்கும் என்ற உண்மையைத் தெரியாத கருணாநிதி தமிழர்கள் அழிந்தாலும் பரவாயில்லை மொழிக்கு முக்கியத்துவம் கிடைத்தால் சரி என்று செம்மொழி மாநாடு ஒன்றை கோவையில் நடத்துகிறார்.
வழக்கம் போல நீண்டு பரந்த தமிழ் மரபில் ஜால்ராக்களாகவும் ரப்பர் ஸ்டாம்புகளாகவுமே வாழ்ந்து பழகிவிட்ட தமிழறிஞர்களுக்கோ கருணாநிதியின் இவ்வரிவிப்பு உற்சாகம் கொடுத்திருக்கிறது. இலங்கை தமிழறிஞர் சிவதம்பிக்குக் கூட அப்படித்தான். சொந்த இனம் அழிக்கப்பட்டது குறித்த எவ்வித அக்கறையும் இல்லாத சுயநல மோகி ஒருவரின் வெளிப்படாகவே சிவதம்பியின் இம்மாநாட்டு பங்கேற்பை நாம் காண வேண்டியுள்ளது. போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு செய்த துரோகத்தை மறைத்து உலகத் தமிழினத்திற்கான வாழ்வது தான் மட்டுமே என்பதை நிறுவ கருணாநிதி எடுக்கும் முயர்ச்சிகள் ஆபாசமான அரசியல் வடிவத்தை தமிழகத்தில் பெற்றிருக்கிறது.தனது ஜாலாரக்களுக்கும் அல்லக்கைகளுக்கும் அரசு நிதியை வாரி வழங்கும் கருணாநிதி இப்போது தமிழ் மாநாட்டு பொறுப்பாளர்களாக நியமித்திருப்பது முழுக்க முழுக்க தனது அடிவருடிகளைத்தான்
நக்கீரன் கோபால் ஊடக பாசிஸ்ட் இந்து ராம் ஊடக வாரிசான கலாநிதி மாறன் என தன் குடும்ப ஊடக அதிகார கட்டமைப்பை மேலும் மேலும் நிறுவிக் கொள்ளும் தந்திரத்தை இதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார். தமிழ் சினிமாவில் மூன்றாம் தரமான பாடலாசிரியரான பா. விஜய் என்கிற கவிஞர் கருணாவைச் சந்தித்து மாநாடு மேடை இப்படி அமைக்கலாமா? மாநாட்டு விழா மலர் இப்படி வெளியிடலாமா? என்று தான் வரைந்து எடுத்துச் சென்றவைகளை காட்டியதாகவும். அதைப் பார்த்து தான் மெய்சிலிர்த்துப் போனதாகவும். கூறும் கருணாநிதி உடனே பா.விஜய்க்கு செம்மொழி மாநாட்டில் பதவியும் வழங்கியிருக்கிறார். சினிமாக் காரர்கள் மீது கருணாநிதிக்கு இருக்கும் பாசம் அளவு கடந்தது. மும்தாஜ், சோனா , குஷ்பு, குயிலி , நமீதா என்று கருணாநிதியை இன்று எந்த நடிகரும் எளிதில் பார்த்து மணிக் கணக்காக பேசி விட முடியும். ஆனால் கரும்பு விவசாயிகளோஇகள் இறக்கும் தொழிலாளிகளோ பஞ்சாலை தொழிலாளர்களோ பதவி நிரந்தரம் கோரும் சத்துணவு பணியாளர்களோ இந்த கருணாநிதியை கடந்த எட்டு மாதமாகியும் பார்க்க முடியவில்லை. கமலஹாசன் ரஜினிகாந்துக்கு விருது கொடுப்பது அங்கே நமீதாவை ஆட விட்டு அதை மூன்று மணி நேரம் அமர்ந்து பார்ப்பது. பின்னர் அவர்களை விட்டே தனக்கு ஒரு அரசு விருதை எடுத்துக் கொள்வது. பின்னர் அவர்களை ஒரு விழா நடத்தச் சொல்லி ‘’உலக சாதனையாளர்” என்றொரு பட்டத்தை எடுத்துக் கொண்டு மகிழ்வது. என்று கருணாநிதியின் அர்ப்ப அரசியல் ஆசைகளுக்கு அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.பெரும் கோடிகளைக் கொட்டி சினிமா எடுத்து அதை பல கோடிகளாக மீண்டும் எடுத்து பெரும் பண்ணைகளாக தமிழகத்தில் வாழ்கிறவர்கள்தான் சினிமாக்காரர்கள்
இவர்களால் தமிழக மக்களுக்கோ அரசுக்கோ கூட எவ்வித ஆதாயங்களும் கிடையாது. ஆனால் இவர்களுக்கு கருணாநிதி காட்டிய சலுகைகள் ஏராளம். அதுவும் ரஜினி கமலுக்கு என்றால் சலுகைகள் தாராளம். இன்றைக்கும் கோடம்பாக்கத்தில் இருக்கும் சினிமாத் தொழிலாளிகளில் நிலை பரிதாபம். ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளோ பகுதி நேர பாலியல் பாலியல் தொழிலாளிகளாக வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். ஒழுங்கற்ற வேலை நேரத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் வேலை செய்யும் லைட்ஸ் மேன்கள் நூறு ரூபாய் ஊதியம் அதிகமாகக் கேட்டதற்கு பல மாதங்கள் அந்தத் தொழிலாளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் பட்டினி போட்டவர்கள்தான் இந்த இந்த கோடம்பாக்கத்து சினிமாக்காரர்கள். அன்றைக்கு தொழிலாளிகளைச் சுரண்டிய இன்றும் சுரண்டிக் கொண்டிருக்கிற சினிமாத் துறையின் பெரும் பண்ணைகளாக நடிகர் நடிகைகளுக்கு கருணாநிதி நலவாரியம் அமைத்திருப்பதோடு அந்த வாரியத்திற்கு நடிகர் சிவக்குமார் போன்ற பெரும் பணக்கார குடும்ப செல்வாக்கு நடிகர்களை நியமித்தும் இருக்கிறது. இதை எல்லாம் விட மிக மோசமான விஷயமாக நாம் கருதுவது என்ன வென்றால் சென்னை என்பது இன்று உயர் மத்தியதர வர்க்கங்களின் நகரமாக மாறிவிட்டது. பெரும் பண்ணைகள் மட்டுமே சென்னையில் வாழும் சூழலில் ஏழைகளும் நடுத்தர வர்க்கமும் வாடகை வீடுகளில் வசிக்கவே பெரும் இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒரு அங்குலம் நிலத்தைக் கூட சொந்தமாக்கி வாழ முடியாத நிலையில் சென்னைக்கு அருகே பையனூரரில் 75 ஏக்கர் நிலத்தை இலவசமாக சினிமாக்காரர்களுக்கு வழங்கியுள்ளார் கருணாநிதி. இந்த இடத்தில் நடிகர் நடிகைகள் மற்றும் பெப்சி உறுப்பினர்கள் 50 ஏக்கரில் வீடு கட்டிக் கொள்வார்களாம். இன்னொரு 15 ஏக்கர் அவர்களின் பொதுவான பயன்பாட்டுக்காம். ( பெப்சியில் உள்ள சாதாரண ஏழைகளுக்கா? இந்த இடத்தைக் கொடுத்து விடப் போகிறார்கள். கோடம்பாக்கத்தில் கோலோச்சும் சில வாரிசு நடிகளும் பெரிய நடிகர் நடிகைகளுமே இந்த இடத்தை எடுத்துக் கொள்ளப் போவதாக பேசிக் கொள்கிறார்கள்) இந்த நிலத்துக்கு குத்தகையாக ஆண்டுக்கு ரூ.1.000 மட்டும் செலுத்தினால் போதுமாம். இதைவிட சினிமா தயாரிப்பாளர்களுக்கும் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தந்துள்ளார் கருணாநிதி. நிலத்தின் வழிகாட்டு மதிப்பில் 3.5 சதவிகிதம் மட்டும் இதற்கு ஆண்டு குத்தகையாக அந்த ‘ஏழைகளிடம்‘ பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது கருணாநிதியின் அமைச்சரவை. குடும்ப அதிகாரம்
ஊடக சர்வாதிகாரம் ஆசியாவில் பெரும் கோடீஸ்வரக் குடும்பம் என தமிழகத்தின் சகல துறைகளிலும் ஏகபோகமாய் வளர்ந்து வரும் கருணாநிதி தனக்கு எதிர்ப்பே இருக்கக் கூடாது என்று எல்லோரையும் வளைத்துப் போடுகிறார். அப்படி அரசியல் அல்லக்கைகளை புதிதாக உருவாக்க வேண்டிய தேவையும் அவருக்கு இருக்கிறது. என்கிற நிலையில் மக்கள் வரிப்பணத்தை இந்த கழிசடைகளுக்குக் கொடுத்து தனது கலைஞர் தொலைக்காட்சிக்கு இவர்களிடன் மறைமுக ஆதரவு கோருகிறார். கருணாநி குடும்பத்தின் இந்த வளர்ச்சியும் முற்போக்கு இயக்கமான திராவிட இயக்கத்திற்கு நேர்ந்துள்ள வீழ்ச்சியும் எதிர்காலத்தில் சமூக பண்பாட்டு தளத்தில் ஆழமான விளைவுகளை தோற்று விக்கும் என்கிற நிலையில். திராவிட இயக்கத்தை அபகரித்த கருணாநிதிய்யையும் அவரது குடும்ப ஆட்சியையும் அரசியலில் இருந்து அடியோடு அப்புறப் படுத்தாமல் உழைக்கும் மக்களுக்கு விடிவு இல்லை.
Source: http://inioru.com/?p=8935
No comments:
Post a Comment