Friday, July 30, 2010

BJP's mammoth Rally in Nagarkoil - Report

நாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்

bjp_nagerkovil_meeting_july_2010_2

கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதை போல் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை மாதம் முழுவதும் தமிழகத்தில் பா.ஜ.க. போராட்டம் நடத்தி வருகிறது. இது குறித்த வறுமைக்கும் உண்டோ மதம்? கட்டுரையை வாசகர்கள் படித்திருக்கலாம்.

இதன் முக்கிய நிகழ்வாக, குமரி மாவட்ட பா.ஜ. சார்பில் ஜூலை-25 ஞாயிறு மாலை நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அலைகடலெனத் திரண்டு வந்து இந்த ஆர்ப்பாட்டதிற்கு ஆதரவளித்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். நகர தலைவர் ராஜன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து மாநில பா.ஜ. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இந்து முன்னணி மாநில நிறுவனர் ராம கோபாலன், அகில இந்திய பா.ஜ. செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், பா.ஜ. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில துணைத்தலைவர்கள் எச். ராஜா, தமிழிசை சவுந்தர்ராஜன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சுகுமாறன் நம்பியார், அகில இந்திய இணை பொது செயலாளர் சதீஷ், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர்.

மாலை 3.45 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மதியம் 2 மணியில் இருந்தே தொண்டர்களும், பொதுமக்களும் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல மக்களின் வருகை அதிகரித்தது. ஆர்ப்பாட்டம் நடந்த பாலமோர் ரோடு முழுவதும் பா.ஜ.க தொண்டர்களும், பொதுமக்களும் நிரம்பி இருந்தனர். அண்ணா ஸ்டேடியத்தின் எதிரில் சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டு அதில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அமர்ந்து இருந்தனர். அண்ணா ஸ்டேடியத்தில் இருந்து வலது புறம் வடசேரி அண்ணா சிலை வரையிலும், இடதுபுறம் மணிமேடையை தாண்டியும் மக்கள் குவிந்திருந்தனர்.

இட நெருக்கடி காரண மாக அந்த பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களிலும், தியேட்டர் கட்டிடங்களிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்து இருந்தனர். ஆர்ப்பாட்டம் நடந்த பாலமோர் ரோட்டில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் மக்கள் தரையில் அமர்ந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் சுமார் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வெளி மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தனர்.

மாலை 3.45 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம், மாலை 5.45 மணிக்கு முடிவடைந்தது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நாகர்கோவில் நகரமே சுமார் 5 மணி நேரம் ஸ்தம்பித்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை பொறுத்தவரையில் சில விசயங்கள் சொல்ல வேண்டும். சாதாரண மக்கள் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். நான் நின்று கொண்டிருக்கும் போது, பக்கத்திலிருந்தவர் அவர் சொந்தக்காரர் ஒருவரைக் கூப்பிட்டுப் பேசினார் - “அப்பா வரலியா?” என்றார். ஏதோ கல்யாண வீட்டு விழாவுக்கு வரலியா என்பது போல. அவர் ஒரு பள்ளிக்கூட தலைமையாசிரியர். எந்த அரசியல் போராட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர்.

bjp_nagerkovil_meeting_july_2010_1

புகைப்படம்: நன்றி - தினமலர்

இந்த ஃபோட்டோ வை நீங்கள் பார்த்தாலே தெரியும் - வந்திருந்தவர்களில் சரி பாதி பெண்கள். அதுவும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். பலர் சொந்த செலவில் பஸ்களில் வந்திருந்தார்கள் என்று தெரிந்தவர் ஒருவர் சொன்னார். அவர் இரண்டு நாட்கள் முன்பு வழக்கமான ஆட்டோவில் செல்லும்போது ஆட்டோ டிரைவர் “தவறாம வந்திருங்க சார். இது நம்ம குழந்தைகளின் உரிமைக்காக” என்று அழைத்தாராம். ஆர்ப்பாட்டம் முடிந்து நான் உணவகத்துக்கு சென்ற போது அங்கிருந்த சர்வர் “கூட்டம் நல்லா இருந்துச்சா? வேலை இருந்ததால வரமுடியல” என்றார்.

இத்தனைக்கும் இது பெரிய அளவிலான மாநாடு கூட அல்ல; வெறும் ஆர்ப்பாட் -டம். நடுத்தெருவில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய இப்படி ஹிந்து சமுதாயத்தின் அனைத்து மக்களும் வந்திருந்ததைக் காண முடிந்தது. ஹிந்து விரோத சக்திகளு -ம் இதைப் பார்த்து கதிகலங்கியிருப்பார்கள். விழிப்படைந்திருப்பார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹிந்துக்கள் மிகச்சிறிய அளவில்தான் இன்னும் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். 51 அல்லது 52 சதவிகிதம். (சிலர் அதீத நம்பிக்கையுடன் 58 என்கிறார்கள்). எனவே சிறிய அளவில் ஹிந்து ஓட்டுக்கள் பிரிக்கப்பட்டாலும் வெற்றி தோல்விகள் மாற்றப்பட -லாம். ஒவ்வொரு ஹிந்து ஓட்டும் முக்கியம் .

ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் - இந்துக்கள் திரண்டெழும் இந்தப் பொன்மயமான காட்சியே தமிழ்நாட்டுக்கு உத்வேகம் அளிக்கும்.

அதனால் தானோ என்னவோ, பெரும்பாலான தமிழ் செய்தித் தாள்களும், தொலைக்காட்சி சேனல்களும் இந்த பிரம்மாண்டமான கூட்டம் பற்றிய செய்திக -ளை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்து விட்டன!

Source: http://www.tamilhindu.com/2010/07/nagerkovil-bjp-protest-july-2010-a-report/

No comments:

Post a Comment