Wednesday, July 28, 2010

‘‘எலுமபுத் துணிடுக்கு வாலாட்டும் நாய்களா காங்கிரஸ்காரர்கள்?’’

‘‘எலுமபுத் துணிடுக்கு வாலாட்டும் நாய்களா காங்கிரஸ்காரர்கள்?’’
இளங்கோவன் ஆவேசம்

அவ்வப்போது தனது அனல் பேச்சுகளால் கொளுத்திப்போடுவதும் பின் அதற்கு பக்குவமான பதில் சொல்லி மழுப்புவதும் காங்கிரஸ் தலைவரான இ.வி.கே.எஸ். இளங்கோவனின் அரசியல் பாணி.

அந்த வகையில் ஜூலை 15-ம் தேதி சென்னை பெரம்பூரில் நடந்த காமராஜர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு... கலைஞரின் சீடர்கள் என்று காங்கிரஸில் அழைக்கப்படக் கூடிய தங்கபாலு, வாசன் போன்றோரை வைத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை கலைஞரைத் தாக்கியிருக்கிறார் இ.வி.கே.எஸ்.

‘‘தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்டால் மக்களுக்கு தொண்டாற்ற முடியாமல் போய்விடும் என்பதற்காக காமராஜர் திருமணம் செய்துகொள்ளவில்லை. காமராஜர் பயந்தது இன்று உண்மையாகியுள்ளது. நான் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை.

நாங்களும் காமராஜர் ஆட்சிதான் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்கிறார் -கள். ஆனால் சாமானியனாகப் பிறந்து குபேரனாக வாழ்ந்துகொண்டிருப்ப -வர்கள் சிலர் காமராஜரோடு தங்களை ஒப்பிட்டுக்கொள்கிறார்கள்’’

என்பதுதான் இந்த தடவை இ.வி.கே.எஸ். இளங்கோவன் விட்ட மேடை ராக்கெட்! கூட்டணிக் குளத்தில் கல்லெறிந்துவிட்டு சென்னையை அடுத்த மணப்பாக்கம் வீட்டில் அமைதியாக அமர்ந்திருந்தவரிடம் சில கேள்விகளை வீசினோம்.

தமிழ்நாட்டில் நடைபெறுவது காமராஜர் ஆட்சி என்று சொல்கிறாரே கலைஞர்?

தமிழகத்தில் ஆள்வது, காங்கிரஸ் எந்த பயனையும் எதிர்பார்க்காமல் ஆதரிக்கின்ற தி.மு.க.வின் ஆட்சி. இது எப்படி காமராஜர் ஆட்சியாகும்?

கூட்டணி என்று வந்தால் பழைய விஷயங்களை கிளறாமல் இருப்பதுதானே நடைமுறை. ஆனால், காமராஜர் ஹைதராபாத் வங்கியில் கோடிக்கணக்கில் குவித்து வைத்திருப்பதாக தி.மு.க. குற்றஞ்சாட்டியதை இப்போது கூறி சூட்டை கிளப்பிவிட்டது ஏன்?

காமராஜர் ஆட்சியின் சாதனைகளை, அவர் தியாகங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு காங்கிரஸ்காரனின் கடமை. அதே சமயம் அவர் அப்போது எந்த அளவுக்கு எதிர்க்கட்சிகளால் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டார் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்வது தவறல்ல. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கு காரணம், ஆட்சியாளர்கள் தங்களை முழுவதும் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

தான் ஒரு காமராஜர் என்று சொல்லிக் கொண்டு குபேரர் ஒருவர் இருக்கி -றார் என்று சொல்கிறீர்களே. யார் அந்த குபேரன்?

நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இப்போது இருக்கிற அரசியல்வாதிகளை பொதுவாக குறிப்பிடுகிறேன். பல சாதனைகளை செய்தவர் காமராஜர். அவர் சாமான்யனாக இருந்தார். சாமான்யனாக வாழ்ந்தார். சாமான்யனாக இறந்தார் என்றுதான் சொன்னேனே தவிர, யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

உங்களால்தான் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி உடையப்போகிறது என்று பரவலாக பேசப்படுகிறதே?

அது தவறு. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஏற்பட நான்தான் காரணம் என்ப -தை யாரும் மறுப்பதற்கில்லை. வரலாற்று ஏடுகளில் அதை மறைக்கவும் முடியாது. இந்த நிலையில் தி.மு.க.வுடனான கூட்டணியை உடைக்க நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. மக்களின் கோரிக்கைகளை எடுத்துப் பேசு -கிறேன். எந்த குறிப்பிட்ட நபருக்கு எதிராகவும் நான் எதையும் சொல்ல -வோ, செயல்படவோ இல்லை.

உங்களால்தான் கூட்டணி ஏற்பட்டது என்கிறீர்கள். ஆனால் தி.மு.க.வை அதிகம் விமர்சிப்பதும் நீங்களாகவே இருக்கிறீர்கள். ஏன்?

தமிழகத்தில் ஒன்றிரண்டு காங்கிரஸ் தலைவர்கள் அளவுக்கு அதிகமாக தி.மு.க.வை புகழ்கின்றனர். இது தி.மு.க.வுக்கு ஆபத்து-. இதே தலைவர் -கள்தான் முன்பு ஜெயலலிதாவையும் புகழ்ந்தார்கள். அ.தி.மு.க.வுடன் இருந்த போது, காங்கிரஸ்காரர்கள், தங்களை குங்குமம் சுமக்கும் கழுதைகள் என்று சொல்லிக்கொண்டார்கள். இன்று எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் நாய்கள் என்று சில காங்கிரஸ் தலைவர்களைப் பார்த்து தொண்டர்கள் கிண்டலடிக்கிறார்கள். இந்த அவப்பெயர் காங்கிரஸுக்குத் தேவையா? இந்தப் பின்னணியில்தான் நான் நியாயமான விமர்சனங்களை முன்வைக் -கிறேன்.

பெரம்பூரில் நீங்கள் பேசிய பிறகு ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதனால், தி.மு.க. மீதான உங்கள் தாக்குதல் குறையுமா?

முதலில் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயரை வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதற்காக பாடுபட்ட சுடலை முத்து, சிவாஜி முத்துக்குமார் ஆகியோரை முதல்வரிடம் நேரில் அழைத்துச் சென்று நன்றி தெரிவிக்க உள்ளேன். அதற்காக முதல்வரிடம் அப்பாயின்மெ -ன்ட் கேட்டுள்ளேன்.

இரண்டாவது, இதை வெற்றி தோல்வி என்றெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. மக்களின் கோரிக்கையை நான் எடுத்து வைத்தேன். அதில் நியாயம் இருந்ததால் முதல்வர் அதை செய்திருக்கிறார். விமர்சனம் குறையுமா கூடுமா என்றெல்லாம் சொல்ல முடியாது. வழக்கம்போல என் பணி (?!) தொடரும்.

மீண்டும் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை காங்கிரஸால் கொண்டு வர -முடியுமா?

ராகுல் காந்தியின் உழைப்பு, எண்ண ஓட்டம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தில் நிச்சயம் காங்கிரஸ் ஆட்சி அமையும்.

மேடையில் அனல் பறக்கப் பேசுகிறீர்கள். ஆனால், கட்சியை வளர்க்க சூடுபறக்க எப்போது களத்தில் பணியாற்றுவீர்கள்?-

தோழமை கட்சியான தி.மு.க.வின் குறைகளை காங்கிரஸ் சுட்டிக்காட்டி -னால் திருந்திவிடும் என்ற நம்பிக்கையில் சொல்கிறோம். அது முடியாத பட்சத்தில் அடுத்து என்ன செய்வது என்று மேலிடத்தில் பேசி நடவடிக்கை எடுப்பேன். அப்போது களத்தில் நானே நேரடியாக குதிப்பேன்.

கோவையில் அ.தி.மு.க.வுக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்தீர்களா?

அவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டிய ஜெயலலிதாவே தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இனியாவது அவர் தன் ஜனநாயகக் கடமையை சரிவர செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்!

Source: http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1512&rid=76



No comments:

Post a Comment