Thursday, July 29, 2010

Nothing that BJP has to do in Price-Hike issue - விலைவாசி பிரச்சனையில் இனி பா.ஜ. செய்வதற்கு ஒன்றுமில்லை: அத்வானி

விலைவாசி பிரச்சனையில் இனி பா.ஜ. செய்வத -ற்கு ஒன்றுமில்லை: அத்வானி

விலைவாசி உயர்வு பிரச்சனையில் இனி பா.ஜனதா செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும், இனி மத்திய அரசு கையில்தான் அது உள்ளது என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.

விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பா.ஜனதா கட்சி 10 கோடி பேரிடம் திரட்டிய கையெழுத்து பட்டியல், குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீலிடம் இன்று கையளிக்கப்பட்டது.

பா.ஜனதா நாடாளுமன்ற கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி தலைமையில் நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, முரளி மனோகர் ஜோஷி, கோபிநாத் முண்டே உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் அடங்கிய அக்கட்சியின் பிரதிநிதிகள், இன்று பிரதிபா பாட்டீலை சந்தித்து இந்த கையெழுத்து பட்டியலை கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி கூறியதாவது:

விலைவாசி உயர்வுக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக நடத்தினோம்.

விலைவாசி உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் எங்கள் கட்சி எம்.பி.க்கள் மற்றும் மாநில தலைவர்கள் திரட்டிய சுமார் 10 கோடி பேரிடம் திரட்டிய கையெழுத்துக்களை குடியரசு தலைவரிடம் நாங்கள் இன்று அளித்தோம்.

விலைவாசி உயர்வு பிரச்சனையில் பிரதான எதிர்கட்சி என்ற முறையில் எங்களது பங்களிப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

விலைவாசி உயர்வு பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பி, எங்கள் கட்சி எம்.பி.க்கள் தீவிரமாக செயல்பட்டனர்.

விலைவாசி உயர்வு அரசின் தோல்வி என்று கூறாவிட்டால்,பிறகு அதனை அரசின் வெற்றி என்றா கூற முடியும்?

இந்த பிரச்சனையில் இன்னும் அதிகமாக எங்களால் எதுவும் செய்ய முடியாது.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட இனிமேல் அரசுதான் தேவையானதை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1007/29/1100729056_1.htm


No comments:

Post a Comment