திண்டுக்கல்: "தி.மு.க., - காங்., கூட்ட ணிக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சி களும் ஓரணியில் திரள வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ரா தாகிருஷ்ணன் தெரிவித்தார். திண்டுக்கலில் அவர் கூறியதாவது:
பஸ் கட்டண உயர்வை ஏற்கனவே தி.மு.க., அரசு மறைமுகமாக உயர்த்தி விட்டது. செம்மொழி மாநாட்டிற்காக காத்திருந்த முதல்வர் கருணாநிதி, தற் போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளார். இதை ரத்து செய்ய வேண் டும். தமிழகத்தில் முன் கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. அதேசமயம், அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். தி.மு.க., - காங்., கூட்ட ணிக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். பா.ஜ., இம்முயற்சியில் இறங்கும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51822
No comments:
Post a Comment