Friday, July 30, 2010

Siddha Medicines 4

சித்த மருத்துவ குறிப்புகள் 4

அடிக்கடி வரும் மயக்கத்தை நிறுத்த :

5, 6 சீத்தா பழக் கொட்டைகளை பொடியாக்கி, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் பலன் கிடைக்கும்.

இடுப்பு வலி குணமாக :

முருங்கைக் கீரையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பையும் கலந்து இடுப்பின் மீது தடவி சூடுபறக்க தேய்த்தால் இடுப்பு வலி குணமாகும்.

பல் ஈறு வீக்கம் குறைய :

பல் வலியின் காரணமாக ஈறுகளில் வீக்கம் ஏற்படும். இதற்கு கிராம்பு, துளசிச் சாறு, கற்பூரம் இம்மூன்றையும் சேர்த்து வலிகண்ட ஈறுகளில் தடவ உடனே வீக்கம் குறையும்.

காசநோய் குணமாக :

செம்பருத்திப் பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர பூரண குணம் கிடைக்கும்.

பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக்க :

வெங்காயச் சாற்றை டூத் பிரஷ்ஷால் தொட்டு பல்விளக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பைப் போட்டு கலக்கி அந்தச் சாற்றில் மீண்டும் பிரஷ்ஷில் தொட்டு பல் துலக்க வேண்டும். இம்மாதி¡¢ வாரத்திற்கு ஒரு முறை பல் துலக்க பற்கள் கறை படியாமலும் வெண்மையாகவும் இருக்கும்.

பெண்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்க :

நெல்லிக்காயை எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு மைய அரைத்து தலையில் தேய்த்து உலரவைத்து பின்னர் குளித்துவர தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.

தலைப்பாரம் குறைய :

தும்பைப்பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்துவர தலைப்பாரம் குறையும்.

சொறி, சிறங்கு படை நீங்க :

உருளைக்கிழங்கின் தோலை எடுத்து அதனுடன் மஞ்சள் வைத்து அரைத்து சொறி, சிறங்கு படை மீது போட குணமாகும்.

பித்தத்தை நீக்க :

பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினசா¢ வாழைப்பழம் சாப்பிட்டு வர பித்தம் தணியும்.

தீராத தலைவலி நீங்க :

தும்பைப் பூவின் இலையை கசக்கி அந்தச் சாறை முகர்ந்தால் தலைவலி உடனே நீங்கும்.

நீ¡¢ழிவு நோய்க்கு :

நாவல்பழத்தின் 10 கொட்டைகள் எடுத்து, இடித்து 150 மில்லி நீர்விட்டு சுண்டக் காய்ச்சி அந்நீரை காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வர நீ¡¢ழிவு குணமாகும்.

ஞாபக சக்தி பெருக :

பப்பாளிப் பழத்தை தினசா¢ சிறு அளவு சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்.

உடல் பருக்க :

பறித்த பச்சை நிலக்கடலை நூறு கடலையும் நேந்திரம் வாழைப்பழம் ஒன்றும் ஒரு கப் பாலும் தினசா¢ சாப்பிட்டு வர உடல் விரைவில் பருக்கும்.

உடல் பருமன் குறைய :

காரட் தினசா¢ சமையலில் சேர்த்துக்கொள்வதுடன் இரண்டு டம்பளர் மோருடன் இரண்டு காரட்டையும் போட்டு மைய அரைத்துக்குடித்து ஒரு வர வாரத்தில் இருந்து உடல் இளைக்க ஆரம்பித்து விடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவரை நிறுத்திவிட வேண்டும்.

முகம் அழகு பெற :

துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் படுத்து காலையில் எழுந்து கழுவினால் முகம் அழகு பெறும்.

வாய் துர்நாற்றம் நீங்க :

வாய் நாற்றம் உள்ளவர்கள் தினசா¢ காலை வெறும் வயிற்றில் 4 டம்ளர் நீரைக் குடித்துவிட்டு எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து சிறிது தண்ணீர் சேர்த்து வாய் கொப்பளித்து வர வாய்துர்நாற்றம் நீங்கும்.

தேள் கடி விஷம் குறைய :

தேள் கொட்டிவிட்டால் அந்தக் கடிவாயில் வெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி ஒரு பகுதியை கொட்டிய இடத்தை சுற்றி நன்கு அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியை தேய்க்க வேண்டும். சிறிது நேரத்தில் வலி நிற்கும்.

நாவறட்சி நீங்க :

நாவறட்சி உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்த நீ¡¢ல் ஒரு மஞ்சளைப் போட்டு சிறிது நேரம் மஞ்சள் வெந்ததும் அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன் சிறிது சேர்த்துக் குடிக்க நாவறட்சி நீங்கும்.

கம்பளிப் பூச்சி கடி குணமாக :

கம்பளிப்பூச்சி கடித்துவிட்டால் வெற்றிலையை கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் அழுத்தித் தேய்த்தால் சிறிது நேரத்தில் குணம் கிடைக்கும்.

உதடுகள் சிவப்பாக மாற :

புதிதாகச் செடியில் பறித்த கொத்துமல்லி இலையை மைய அரைத்து இரவு படுக்கப்போகும் போது உதட்டில் தடவி வர, உதடு சிவப்பாக மாறும்.


முகப்பருவை போக்க :

வீட்டில் உள்ள சீரகத்தை எருமைப்பால் விட்டு மைய அரைத்து முகப்பருவின் மீது தடவ முகப்பரு மறையும்.

உள்நாக்கு வளர்ச்சி நிற்க (டான்சில்) :

கா¢சலாங்கண்ணி கீரைச் சாறும் பசுவின் நெய்யும் சம அளவு கலந்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி காலை, மாலை உட்கொண்டால் 20 நாட்களில் பலன் கிடைக்கும். மிகக் குளிர்ச்சியான உணவு வகைகளை நீக்கவும்.

(S. ஆறுமுகம், B.Sc.,B.S,M.S.,)

Source: http://www.moderntamilworld.com/health/siddha_tips_4.asp

No comments:

Post a Comment