நாகர்கோவில்:மத்திய, மாநில அரசுகள் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கோரி வரும் 25ம் தேதி குமரி மாவட்ட பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ., எம்.பியுமான நவ்ஜோத்சிங்சித்து கலந்து கொள்கிறார்.இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கோரி பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மையினருக்கு பல்வேறு சலுகைகள் அளித்து வருகிறது. சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை.ஆகவே இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க கோரி பா.ஜ., சார்பில் ஜூலை போராட்டம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த போராட்டம் வரும் 25ம் தேதி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேரை கலந்துகொள்ள செய்யும் விதத்தில் ஏற்பாடுகள் நடந்து வருகுன்றன.போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு, இன்று(22ம்தேதி) மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நகர தலைவர் ராஜன் தலைமையில், நாகர்கோவில் நகர பகுதிகளில் வாகன பிரசாரம் செய்கிறார்.
பார்வதிபுரத்தில் இருந்து துவங்கும் வாகன பிரசாரம் கிருஷ்ணன்கோவில், வடசேரி, ஸ்டேடியம், மணிமேடை, மீனாட்சிபுரம், கோட்டார், பறக்கைவிலக்கு ஜங்சன், பீச்ரோடு வழியாக செட்டிகுளம் ஜங்சன் வந்தடைகிறது.இந்த நிலையில் வரும் 25ம் தேதி நாகர்கோவில் ஸ்டேடியம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் விளையாட்டு வீரரும், பா.ஜ., எம்.பி.,யுமான நவ்ஜோத்சிங்சித்து கலந்து கொள்கிறார். மேலும் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மாநில தலைவர் பதவியேற்ற பிறகு முதன் முதலில் நடைபெறும் மிக பெரிய போராட்டம் என்பதால், தொண்டர்கள் முழு வீச்சில் பணிகளை செய்து வருகின்றனர்.Source: http://www.dinamalar.com/district_main.asp?id=295#44719
No comments:
Post a Comment