ஒரு ரூபாய்க்கு அரிசி... வீட்டுக்கு வீடு கலர், "டிவி ...' விவசாயிகளுக்கு இலவச நிலம்... மருத்துவ சிகிச்சைக்கு காப்பீடு... என வரிசையாய் நலத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளர்களில், ஒவ்வொருவரின் வீட்டிலும், இவற்றில் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ளனர்.
ஐந்து வில்லன்கள்:ஆட்சியின் மீது பெரிய அதிருப்தி இல்லை. ஆளுங்கட்சியை எதிர்க்க பலமான எதிர்க்கட்சி இல்லை. எனவே, மீண்டும் தி.மு.க., ஆட்சிதான் வரும்...கடந்த மூன்று மாதங்களுக்கு முன், அரசியல் விமர்சகர்கள், பொதுமக்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சியினரே இப்படித்தான் தெரிவித்தனர். பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக, இவை இருந்தன. ஆனால், தேர்தல் தேதி நெருங்க, நெருங்க இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்ற கருத்து வேகமாய் பரவி வருகிறது.எதிர்கொள்ள ஆள் இல்லாத அளவுக்கு, பலமான கட்சியாக இருந்த தி.மு.க.,வைப் பலவீனப்படுத்தும் வகையில், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்தான், இந்த மாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த பட்டியலில் ஆளுங்கட்சி -யை எதிராக முன்னணியில் நிற்கும் ஐந்து, "வில்லன்களை' சமாளிப்பதில்தான், மீண்டும் ஆட்சியை பிடிப்பது யார் என்பதற்கு பதிலாக இருக்கும்.
அ.தி.மு.க. :
தொடர்ந்து நடந்த இடைத்தேர்தல்களில், சொல்லி வைத்தார்போல் ஜெயித்து, எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது தி.மு.க., - அ.தி.மு.க.,வில் இருந்து முக்கியத் தலைகளை இழுக்கும் பணியும் தீவிரமா -னதால், "அவ்வளவுதான் அ.தி.மு.க.,' என்ற நிலை இருந்தது. ஆனால், ஜெயலலிதா பங்கேற்ற கோவை ஆர்ப்பாட்டத்திற்கு கூடிய கூட்டமும், அவர் எடுத்து வைத்த குற்றச்சாட்டுகளும் ஆளுங்கட்சியை அசைத்து பார்க்க வைத்து விட்டது. கோவையை அடுத்து, திருச்சி, மதுரை, சேலம் சென்னை என, தேர்தலுக்கான களம் அமைத்து அ.தி.மு.க., இறங்கிவிட்டது. அ.தி.மு. -க.,வின் இந்தஆக்ரோஷம் ஆளுங்கட்சிக்கு எதிரான முக்கிய வில்லனாக -வும், முதல் வில்லனாகவும் இருக்கிறது.
மின்வெட்டு:தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால், மாணவர்களில் துவங்கி, பெரிய தொழிற்சலைகளை நடத்தும் தொழிலதிபர்கள் வரை பாதித்தவர்கள் பட்டியல் மிக அதிகம். கடந்த லோக்சபா தேர்தலின்போது, ஆளுங்கட்சி தோற்றால், அதற்கு மின்வெட்டுதான் காரணமாக இருக்கும் என வெளிப்ப -டையாக ஆற்காடு வீராசாமி அறிவித்தார். அந்த நிலை இன்னும் தொடர் -கிறது.முதல்வர் தலைமையில் சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்ட முடிவில் கூட, மின் வினியோகம் சீராக இன்னும் இரு ஆண்டுகள் ஆகும் என்ற உண்மையே வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் மின்வெட்டு மிகப் -பெரிய பிரச்னையாக உருவெடுப்பது உறுதி.
இலங்கை விவகாரம்:
ராஜிவ் கொலைச் சம்பவத்திற்கு பிறகு, தமிழகத்தில் இலங்கை விவகார -த்தை சொல்லி ஓட்டுக்களைப் பெற முடியாது என்பது தொடர்ந்து நிரூபிக் -கப்பட்டுள்ளது. சமீபத்திய லோக்சபா தேர்தலும் அதற்கு உதாரணம். ஆனால், இலங்கையில் இறுதிகட்ட போர் நடத்த போதும், போர் முடிவுக்கு வந்தபின், முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் ஆளுங்கட்சி தன் கடமையை செய்யவில்லை என்ற கருத்து பெரும்பான்மை -யினரிடத்தில் இருக்கிறது. இதோடு, இலங்கை ராணுவத்தால், மீனவர்கள் கொல்லப்படும் சம்பவம் தொடர்வது, ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய, "வில்லனாக' குறிப்பிடலாம்.
விலைவாசி உயர்வு:கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை ஏற்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வு விலைவாசி உயர்வுக்கு காரணமாய் உள்ளது. மத்திய அரசில் பங்கேற்றுள்ள தி.மு.க., இதைத் தடுக்கவில்லை என்ற கோபம் தமிழக மக்களிடம் பரவலாக உள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்கும் மனநி -லையில் வாக்காளர்கள் இருப்பது ஆளுங்கட்சியின் அடுத்த, "வில்லன்' என்று சொல்லலாம்.
நிர்வாக குளறுபடிகள்:
பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பகங்களில் பதிந்து விட்டு, வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு, பதிவு மூப்பு அடிப்படையில், வேலை வழங்கியது பாராட்டைப் பெற்றது. வெளிப்படையான நிர்வாகம் என்ற வெள்ளைத் துணியின் மேல், ஆசிரியர் பணி நியமனத்தில் குளறுபடி, லஞ்ச வழக்குகள், போலி மார்க்சீட் போன்ற கறை படிந்து, அரசின், "இமேஜ்' சரிவுக்கு காரண -மாகியுள்ளது. சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு, லஞ்சம், "போலி'களின் ராஜ்யம், விவசாயிகள் பிரச்னை இவற்றோடு நதி நீர் விவகாரங்களும் அரசுக்கு எதிராக அணிவகுத்து நிற்கின்றன. தேர்தல் நாள் நெருங்கும்போது, எதிர்க்கட்சிகள் இவற்றை பூதாகரமாக்கும் என்பதால், "வரும் முன் காக்க' ஆயத்தங்களை தொடங்க வேண்டிய நிலையில் உள்ளது ஆளுங்கட்சி.
Courtesy: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46587
No comments:
Post a Comment