Monday, July 19, 2010

Supreme Court condemns - an accused as Justice?

குற்றங்களில் ஈடுபட்டவர் நீதிபதியா?சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

புதுடில்லி:நீதிபதிகள் நியமனங்களை மேற்கொள்ளும் முன், அவர்களைப் பற்றிய போலீசாரின் நன்னடத்தைச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் காசியா முகமது முசாமில். இவர், 1996ம் ஆண்டு மே 15ம் தேதி நீதித்துறை பணியில் சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் பணியில் இருந்த அவரை, நீதித்துறை பணிக்கு லாயக்கற்றவர் எனக் கூறி கர்நாடக ஐகோர்ட் விடுவித்தது.

இதில், கோபமடைந்த முசாமில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.முசாமில் தொடர்பான ஆவணங்களைப் பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி அடைந்தது. போலீசின் ரவுடிகள் பட்டியலில் இருந்த இவர் எப்படி நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என, வியப்பும் அடைந்தது.மஜ்லிஸ் - இசா - ஓ - தான்சிம் என்ற அமைப்பின் பொதுச் செயலராக இருந்த முசாமில், கிரிமினல்களுடன் சேர்ந்து பல கொடிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிந்தது.இதையடுத்து, மனுவை விசாரித்த நீதிபதிகள் சவுகான் மற்றும் சுவாதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:நீதிபதிகள் நியமனங்களை மேற்கொள்ளும் முன், அவர்களைப் பற்றிய போலீசாரின் நன்னடத்தை சான்றிதழ்களைப் பெற வேண்டியது அவசியம். அதை அனைத்து ஐகோர்ட்டுகளும் பின்பற்ற வேண்டும். நீதிபதிகளைப் பற்றிய வருடாந்திர ரகசிய ஆவணங்களையும் ஐகோர்ட்டுகள் பராமரிக்க வேண்டும்.

ஒருவரை அதிகாரியாக நியமிக்க வேண்டும் எனில் அல்லது நீதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் எனில் அல்லது பதவி உயர்வு அளிக்க வேண்டும் எனில், அவரைப் பற்றிய வருடாந்திர ரகசிய ஆவணங்களைப் பராமரிப்பது அவசியம்.மாநில நீதித்துறை பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் போது, அவர்களை போலீசாரின் நன்னடத்தைச் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். நியமனங்களை மேற்கொள்ளும் முன்னரே இவற்றைப் பெற வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=42079


No comments:

Post a Comment