ஆட்சியை கைப்பற்ற தேர்தலில் லஞ்சம் கொடுப்பது ஒரு வகை. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கே லஞ்சம் கொடுப்பது மற்றொரு வகை. முதல்வகையில் பயனாளிகள் பொதுமக்கள். இதில் சில ஆயிரங்கள் மட்டுமே வீசப்படும். இரண்டாம் வகையில் பயனாளிகள் எம்.பி.,க்கள். தொகையும் அதிகம். அதாவது சில, பல கோடிகள். அதுவும் கட்டுக்கட்டாக பணம் காட்டப்பட்டு வலைவீசப்படும்.
இந்த உலகத்திற்கே பெரும் நல்ல காரியம் செய்து வரும் விக்கிலீக்ஸ், மன்மோகனின் கடந்த ஆட்சியின் கடைசி காலத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற ஏமாற்றுவேலையின் பின்னால் எப்படியெல்லாம் எம்.பி.,க்கள் விலைபேசப்பட்டனர் என்ற நாற்றத்தை நாட்டுக்கு சொல்லியுள்ளது.
கேப்டன் சதீஷ் சர்மா என்பவரும் அவரது உதவியாளர் நச்சிகேதா கபூர் என்பவரும் அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை அழைத்து, ‘‘பாருங்கள்...’’ என்கின்றனர். கத்தை கத்தையாக பணம். ‘‘எதற்கு இந்த பணம் எல்லாம்?’’ என அதிகாரி கேட்கிறார். ‘‘கவலைப்படாதீர்கள்.. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும். எப்பாடுபட்டாவது அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம்’’ என்கிறார் சர்மா. அந்த அதிகாரி இந்த தகவல்களை எல்லாம் வாஷிங்டனில் இருக்கும் தனது எஜமானர்களுக்கு அனுப்புகிறார். இதுதான் கேபிளில் உள்ளது.
சரி. சதீஷ் சர்மா யார்? ஆந்திராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் டூன் ஸ்கூலில் ராஜிவ் காந்தியோடு ஒன்றாக படித்தவர். இந்த நெருக்கத்தை வைத்தே காங்கிரஸ் வளர்ந்தவர். அதன்பிறகும் நேரு குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்தவர். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது 1993 லிருந்து 1996 வரை மத்திய அரசில் பெட்ரோலியத்துறைக்கு மந்திரியாக இருந்தவர். ஏகப்பட்ட ஊழல்கள், வெளிநாட்டு வங்கிகளில் பணம் பரிவர்த்தனை... என நிறைய சர்ச்சைகளில் சிக்கியவர். நிறைய எம்.பி.,க்களுக்கு பெட்ரோல் பங்க் அனுமதி, கேஸ் ஏஜென்சி என அள்ளி வழங்கியவர். தமிழ்நாட்டில்கூட பல காங்கிரஸ்காரர்கள் இன்றைக்கும்கூட பெட்ரோல்பங்குகள், கேஸ் ஏஜென்சிகள் என வைத்து ஜாம் ஜாம் என கொழித்துக் கிடக்கின்றனர் என்றால் அது, அந்த காலத்தில் இவர் செய்த புண்ணியத்தில்தான் என்பது பலரும் அறியப்படாத செய்தி.
இந்த சர்மாவிடம் அரசியல் எடுபிடியாக இருந்ததாக விக்கிலீக்ஸ் கேபிளில் கூறப்பட்டுள்ள நச்சிகேதா கபூர் யார்? டெல்லியின் அதிகார வட்டாரங்களில் உலா வரும் பல ‘எடுப்பு’களில் இவரும் ஒருவராக இருந்துள்ளார். காங்கிரசில் உள்ள பிரபல பெண் தலைவர்களில் முக்கியமானவராகவும், அதிரடியான ஆளாகவும் கருதப்படுபவர் ரேணுகா சவுத்ரி. இவருடன்தான் இந்த கபூர் வளைய வந்தார். முந்தைய ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ரேணுகா பொறுப்பேற்றபோது அவருடனேயே அமைச்சகத்துக்குள்ளும் வந்துவிட ஆசைப்பட்டார். அதாவது அமைச்-சரின் சிறப்பு அதிகாரியாக கபூரை நியமிக்க ரேணுகா முயற்சி செய்ய, அதற்கு மத்திய அமைச்சரவை செயலகம் முட்டுக்கட்டை போட்டு-விட்டது. எந்தவொரு முக்கிய அலுவல்-களும் இவருக்கு அளிக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்-கப்பட்டுவிட்டது. ஆனாலும் அறிவிக்-கப்படாத உதவி அதிகாரியாக வளைய வந்துள்ளார்.
அந்த அதிகார பவுஸை கொண்டுதான் இவர் அடிக்கடி பார்ட்டிகளை வைத்துள்ளார். அந்த பார்ட்டிகளில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்-தர்களும் பலமுறை பங்கேற்-றுள்ளனர். அப்போதே கபூரின் செயல்-பாடுகள் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
2009&ம் ஆண்டு தேர்தலில் ரேணுகா சவுத்ரி தோற்றுப் போய் விட்டதால் அமைச்சராக முடியவில்லை. இதனால் கபூரின் நிலைமை கேள்விக்-குறியானது. அப்போதுதான் ஒரு சர்ச்சையில் சிக்கினார். ரேணுகா இருந்த அமைச்சகத்தை விட்டு வெளியேறியபோது அலுவலக கம்ப்யூட்டரில் இருந்து சில முக்கிய தகவல்களை அழித்துவிடும்படி கீழ்நிலை பணியாளர் ஒருவரை கபூர் மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கும் ஆளானார். தவிர இவரது கம்ப்யூட்டரில் இருந்த ஹார்டு டிஸ்க்கே காணாமல் போய்விட்டது. இதுகுறித்து அமைச்சகம் சார்பில் திருட்டு புகார் அளிக்கப்பட்டு எப்.ஐ.ஆர். கூட போடப்பட்டது.
இதற்கிடையில், காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கவே, அதில் அடைக்கலம் புகுந்தார் கபூர். 2009 ஜுலையில் ஆர்கனைசிங் கமிட்டி டைரக்டராக சேர்ந்துள்ளார். பிறகு 2010 பிப்ரவரியில் புரோட்டோகால் மற்றும் மீடியா தொடர்பு பிரிவிற்கு டெபுடி டைரக்டர் ஜெனரலாக பதவி உயர்வும் கிடைக்கப் பெற்றுள்ளார். சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதம் ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய்.
தற்போது குடையோ குடையென குடைந்து வரும் சுரேஷ் கல்மாடிக்கு மிகவும் நெருக்கமாகவும் இந்த கபூர் இருந்துள்ளார். இவருடன் பணியாற்ற முடியாது என்று பல மூத்த அரசு அதிகாரிகள் மறுப்பும் தெரிவித்துள்ளனர். கபூரின் வரம்புமீறிய செயல்பாடுகளை கல்மாடியாலேயே நிறுத்த முடியாதநிலை கூட ஏற்பட்டது. இதனால் ஒரு சில அதிகாரிகளே கூட தங்கள் பொறுப்புகளில் இருந்து வெளியேறவும் செய்துள்ளனர்.
இத்தனை சக்தி வாய்ந்தவரா கபூர் என்று கேட்பதற்கு முன் இன்னும் ஒரு கூடுதல் தகவல். இவரது கல்வி தகுதி என்ன என்பது பற்றி ஆராய்ந்தால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் பலருக்கும் ஏற்படுகிறது. காமன்வெல்த் ஆர்கனைசிங் கமிட்டிக்கு இவர் அளித்த ஆவணங்களின்படி பி.ஏ. (ஹானர்ஸ்) படித்தவர். ஆனால் இவர் இணைத்து அளித்ததோ டெல்லி பல்கலைக்கழக ரெகுலர் பி.ஏ. டிகிரி சான்றிதழ். அதில் எந்த காலேஜ் அல்லது எந்த கோர்ஸ் என்பது பற்றியோ விவரம் ஏதும் இல்லையாம்.
இவர் என்னதான் படித்தவர் என்று தெரிய, முகமது யூனுஸ் சித்திக் என்பவர் ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டபோது அதிகாரிகளால் தகவல் தர இயலவில்லை. கபூர் வெறும் பத்தாம் கிளாஸ் படித்தவர். அதில் கூட அவர் பெயில் ஆனவர் என்று கூறும் சித்திக், இதுகுறித்து விசாரிக்கும்படி உள்துறை அமைச்சகத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். போர்ஜரி சான்றிதழ்களை காட்டி உயர் அதிகார வளையம் வரை நுழைந்துள்ள இந்த கபூர் பற்றிதான் விக்கிலீக்ஸ் கேபிளில் கூறப்பட்டுள்ளது. எம்.பி.,க்களை விலைபேசும் காரியங்களில் ஈடுபட்டதாக இந்த இருவர் மீதும் எழுந்துள்ள சர்ச்சை இப்போது அடங்காது போல தெரிகிறது. எப்படியோ மன்மோகன் ஆட்சி என்பது புரோக்கர்களின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு ராடியா இப்போது கபூர்!
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2587&rid=113
‘
No comments:
Post a Comment