Sunday, December 26, 2010

மத மாற்றம் ஒரு தேசிய குற்றம்

*மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்? *

உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது.

ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு நாடுகளும், கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கே அந்தப் பெயர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம் மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.

உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பவிலும் இரண்டாம் நூற்றாண்டில் அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது போக, மூன்றாம் நூற்றாண்டில் அதே நிலை வலுவான ஆசியா கண்டத்திலும் ஏற்பட்டது. இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளை உருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும் மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

கிறிஸ்தவ** மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று பாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி 78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%, காங்கோ 62% , எத்தியோப்பியா 52%, கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென் ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%.

இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அடிப்படையில் பெரிய கலாச்சாரமோ அல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்க முடிந்தது. ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ள மதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயே இவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது.

இந்தியாவில் ஏறக்குறைய *4000 *மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்து வருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில் கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2 லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்க**ளாக இருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780 உள்ளன. இது போன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்ட வேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது.

இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள் வருகிறது என்கிறது புள்ளிவிபரம்.

யோசித்துப் பாருங்கள் . வெறுமனே ஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால் எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானே மாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை. 180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தை கடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம் இருக்கும்.

சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள் கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

1500வது வருடத்திலேயே 30 லட்சம் மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று 65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயே நடத்தப்படுகிறது. சுகபோகத்திற்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு விலை போனவர்கள் தான் இவர்களில் அதிகம்.

http://devapriyaji.activeboard.com/index.spark?aBID=134804&p=3&topicID=34457068&page=1&sort=newestFirst

No comments:

Post a Comment