Tuesday, December 28, 2010

Dec 28 மடக்கியது சி.பி.ஐ. திணறினார் ராசா. தவிர்க்க முடியாத கைது நடவடிக்கை.


இரண்டு நாட்கள்... பதினைந்து மணி நேர மாரத்தான் விசாரணை முடிந்து அப்பாடா என்று மூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறார், ராசா... இரண்டு நாட்கள் விசாரணையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை குடைந்து எடுத்துவிட்டார்கள். விசாரணையை எப்படி எதிர்கொள்வது என்று முன் எச்சரிக்கையுடன் சென்றவர், சி.பி.ஐ.யின் எதிர்பாராத கேள்விகளால் திணறித்தான் போனார் என்று சொல்லப்படுகிறது.

இந்த க்ளைமேக்ஸ் இடைவெளியில் அறிவாலயத்தில் இறுக்கம் தளர்ந்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் இருந்து கட்சியைக் காப்பாற்ற அடுத்தகட்ட முயற்சியில் முதல்வர் கருணாநிதி தீவிரமாகி யுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜரானார் ராசா. அன்றைய தினம் மட்டும் 9 மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணையில் நடந்தது என்ன என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

அலுவலக வாசலில் நின்று அதிகாரிகள் ராசாவை உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு அறையில் உட்கார வைத்தனர். அவரிடம், அறுபது பக்கம் கொண்ட கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதித் தருமாறு கேட்டுள்ளனர். அதை வாங்கிப் படித்த அவர் ஏற்கெனவே தயார் செய்துகொண்டு வந்திருந்ததால், பதற்றம் இல்லாமல் பதில்களை எழுதினார்.

மதிய உணவு இடைவேளைக்காக ஒரு மணி நேரம் ஓய்வு கொடுத்தனர். விசாரணை முடிந்தது என்று நினைத்தார், ராசா. ஆனால், அவரைச் சுற்றி 11 சி.பி.ஐ. அதிகாரிகள் உட்கார்ந்து கொண்டனர். அடுக்கடுக்காக பல கேள்விகளைக் கேட்க, ராசா நிதானமாக பதில் சொல்லியிருக்கிறார். கேள்விகள் போகப்போக ராசா தடுமாற ஆரம்பித்து இருக்கிறார். முதலில் அவர் சொன்ன பதில்களும், பின்னர் கேள்வியை மாற்றிக் கேட்டபோது சொன்ன பதில்களும் குழப்பமாக இருந் ததாம். இதைக் குறித்துக்கொண்ட அதிகாரிகள், ‘முதலில் இப்படிச் சொன்னீர்கள். இப்போது மாற்றிச் சொல்கிறீர்களே?’ என்று கேட்க திகைத்துப் போனார்.

ராசாவின் பினாமி கம்பெனிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அதற்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கியது ஏன்? ராசாவை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக்க நீரா ராடியா நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான ‘டேப்’தான் மீடியாக்களில் வெளியாகியுள்ளது. ஆனால், ராசா மத்திய அமைச்சராக இருந் தபோது, 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக நீரா ராடியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை அடங்கிய டேப்பை சி.பி.ஐ. போட்டுக் காட்ட, அவரது முகம் வெளிறிப்போனதாம். அந்த டேப்பின் மூலம் எழுந்த சில கேள்விகளை ராசாவிடம் கேட்டு விளக்கம் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, யார் யாருக்கெல்லாம், எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? குறிப்பிட்ட சில கம்பெனி களுக்கு, 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்ய யார் பரிந்துரை செய்தது? உள்ளிட்ட கேள்விகளுடன், ரெய்டின்போது ராசா வீடு, அலுவலகத்தில் கைப் பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதில் அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட டி.ஓ.டி. அலுவலக ஃபைல்கள் பற்றி இருந்ததாம். ‘பதவியை ராஜினாமா செய்த பின்னர் அந்த ஃபைலை ஏன் வீட்டில் வைத் திருந்தீர்கள்? அரசு ரகசியத்தை நீங்கள் எப்படி வைத்திருக்கலாம்?’ என்று கேள்வி எழுப்பி னார்களாம். அந்த பைலில்தான் பிரதமர் எழுதிய முக்கிய கடிதங்கள் இருந்ததாம்.

அனைத்துக் கேள்விகளுக்கும் மழுப்பலாக பதில் சொல்லி சமா ளிக்கப் பார்த்திருக்கிறார். சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்து வைத்த ஃபைல் களைப் பார்த்ததும் அவர் ஆடிப் போய், ஒரு கட்டத்தில் உண்மையைச் சொல்லியிருக்கிறார். 9 மணி நேர விசாரணையை முடித்து இரவு 7.30 மணிக்கு ராசாவை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

விசாரணை முடிந்தது என்று ராசா நினைக்க, ‘மீண்டும் நாளைக்கு வரவேண்டும்’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்ல கலங்கிப்போனாராம்.

இரண்டாவது நாள் விசாரணை மிகவும் கடினமாக இருந்ததாம். மீடியாக்களின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக தனது படை பரிவாரங்களை எல்லாம் வி ட்டுவிட்டு தன்னந்தனியாக அவர் காலை 8.30 மணிக்கெல்லாம் சி.பி.ஐ. அலுவலகம் போய்விட்டார்.

முதல்நாள் விசாரணை போல், 2-வது நாளிலும் விசாரணை இருக்கும் என்று எண்ணிய ராசாவிற்கு அதிர்ச்சி. 2வது நாள் விசாரணையில் சி.பி.ஐ. அதிகாரிகளின் அணுகுமுறையில் வேறுபாடு இருந்துள்ளது.

அன்றைய தினம் ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் கிடைத்த பணம் எங்கே போனது? யார் யார் மூலம் அனுப்பப்பட்டது என்று கேட்டுள்ளனர். முதலில் அவர் மறுத்துப் பேசவே, நீரா ராடியா வாக்குமூலம், ஹவாலா ஏஜெண்டுகள் கொடுத்த வாக்குமூலம், அவர்களின் ரெக்கார்டுகள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக எடுத் துப் போட்டுள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள்.

அதோடு, இவருக்கு வெளிநாட்டில் உள்ள சொத்துக்களின் விவரங்களையும், பினாமி சொத்துப் பட்டியலையும் அதிகாரிகள் எடுத்துவிட, ஆடிப்போனார். அதன் பின்னர் வேறு வழியில்லாமல் அதிகாரிகளின் கேள்விகளுக்கு விறுவிறுவென பதில் சொல்லியிருக்கிறார். கேள்விகள் அனைத்தும் வெளிநாட்டு முதலீடு பற்றியே இருந்ததால், பெரா (திணிஸிகி) வழக்கு வருமோ என்ற சந்தேகம் ராசா மனதில் ஏற்பட்டுள்ளது. அப்படி வழக்கு வந்தால், கைதாவதில் இருந்து தப்பிக்க முடியாது. ஆறு மணி நேர விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்த அவர், ரொம்ப அப்செட்டாக இருந்தாராம்.

‘விசாரணை முடிந்துவிடவில்லை. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம். அப்போது வாருங்கள்’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். மேலும், இன்னும் சில தினங்களில் ராசாவின் மனைவியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.

சி.பி.ஐ. விசாரணையில் என்ன நடந்தது என்பதை உடனுக்குடன் டெல்லியில் இருந்து அறிவாலயத்துக்கு ‘பாஸ்’ செய்யப்பட்டதாம். ஸ்பெக்ட் ரம் தொடர்பாக முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து ஏதாவது விசாரிக்கப்பட்டதா? என்று விசாரணை முடிந்து வெளியில் வந்த ராசாவிடம் எம்.பி.க்கள் குடைந்து எடு த்துவிட்டார்களாம். அவர் இல்லை என்று சொன்ன பதில் உடனடியாக சென்னைக்கு சொல்லப்பட்டதாம். அதன் பின்னர் தான் இறுக்கம் தளர்ந்ததாம்.

இதை எதிர்பார்த்துதான் சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்நாள் ராசாவுக்கு ஆதரவாக மாவட்டம் முழுவதும் ஸ்பெக்ட்ரம் விளக்கக் கூட்டம் நடத்தும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டதாம். நெல்லையில் நடந்த விழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டு, ‘ராசாவை கழகம் கைவிடாது’ என்று சொன்னாராம். கூட்டம் நடத்தியதற்கு கைமேல் பலன் கிடைத்ததால் அடுத்தகட்ட மூவிற்கு ஆயத்தமாகி வருகிறது.

வழக்கு சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் இருப்பதால், இன்னும் விசாரணை தொடரும் என்பது தி.மு.க. தெரிந்தே வைத்திருக்கிறது. தேர்தல் வேறு நெருக்கத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் ஸ்பெக்ட்ரமைத் தாண்டி கட்சியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு முதல்வர் கருணாநிதியிடம் இருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரையில் கூட்டணியே இல்லை என்றாலும் வெற்றி பெற்று விடுவோம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் செல் வாக்கோடு இருந்தது. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எப்படி கூட்டணி அமைப்பது, மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வருவது என்பது குறித்து முதல்வர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

http://www.thedipaar.com/news/news.php?id=22530

No comments:

Post a Comment