Friday, December 31, 2010

ஆங்கில புத்தாண்டு இரவு கொண்டாட்டம்

தீபாவளிக்கு 10 மணிக்கு மேல் கொண்டாடக் கூடாது, ஆனால், ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு ஒன்றரைக்கு வரை கொண்டாடலாமாம்!

vedaprakash எழுதியது

தீபாவளிக்கு 10 மணிக்கு மேல் கொண்டாடக் கூடாது, ஆனால், ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு ஒன்றரைக்கு வரை கொண்டாடலாமாம்!

இந்தியக் கூலிகளின் / அடிமைகளின் கொண்டாட்டம்: குடிப்பது, கூத்தடிப்பது, கண்ட பெண்களுடன் / ஆண்களுடன் ஆடுவது, விபச்சாரம் செய்வது, கண்டபடி அலைந்து திரிவது……………..இதுதான் ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் லட்சணம். ஸ்டார் மற்றும் இதர ஹோட்டல்கள் லட்சக்கணக்கில் பணத்தை அள்ள இந்த அசிங்க-ஆபாச-வேசித்தனக் கூத்துகளை ஏற்பாடு செய்கிறார்கள். இதற்காகவே, விபச்சாரிகளை, விலைமாதர்களை, கால்கேர்ள்களை தயாராக வைத்திருக்கிறார்கள். அவரவர் வசதி, தகுதி, எல்லோவற்றிற்கும் மேலாக பணத்திற்கு ஏற்றபடி எல்லாமே தரப்படும், அனுபவிக்கலாம். இதில் உள்ள அசிங்கங்களை மறைக்க நாகரிக முகமூடி வேறு!

பெண்கள் ஹோட்டல்களில் இரவு 9 மணிக்கு மேலே இருக்கக் கூடாது என்று ஆணையிடுவதுதானே? சென்ற வருடம் இத்தனை பெண்கள் கற்பழிக்கப் பட்டார்கள், புத்தாண்டு கூத்துகளில் சிக்கவைத்து பாதிப்பு அடைந்தார்கள், சீரழிந்தார்கள், கெட்டுப் போனனர்கள் என்று லிஸ்ட் வைத்துக் கொண்டு, பெண்கள் ஒன்பது மணிக்கு மேலே இந்த ஹோட்டல்களில் இருக்கக் கூடாது என்று ஆணையிடுவதுதானே? செய்யமாட்டார்களே! ஆக எல்லோருமே இதற்கெல்லாம் அடிமைகள் போலத்தான் செயல்படுகிறார்கள். ஆனால், நீச்சல்குளத்திற்கு மட்டும் கட்டுப்பாடு வந்துவிட்டது!

திராவிட அரசு ஒன்றரை மாதத்து சரக்கை கூட்டி வைத்துள்ளதாம்! வெட்கங்கெட்ட திராவிட அரசு சரக்கை விற்பதில்தான் கவனம் செல்லுத்துகிறது. இதில் கோடிகளில் விற்பனையென்றால், ல்ட்சங்களில் கமிஷன் செல்கிறதாம். கணக்கில் வராத சரக்கையும் இதில் சேர்த்து விற்று கொள்லை லாபம் அடிக்கிறார்களாம்! முன்பு “உள்ள சூத்திர அரசைக் காப்போம்”, என்று என்று வால்போஸ்டர்கள் ஒட்டுவார்கள்! இப்பொழுது உள்ள சரக்கு-அரசை காப்போம் என்று ஒட்டுவார்களா?

தமிழ் போராளிகள் எங்கே? தமிழ், செந்தமிழ் என்றெல்லாம் வாய் கிழிய பேசும் சூராதி சூரர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இப்பொழுது மட்டும் தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு எல்லாம் பேச மாட்டார்களா? பெண்களின் கற்பு விலை போவதை கண்டு கொள்ளமல் பார்ப்பார்களா, இல்லை பங்கு போட்டுக் கொள்வார்களா? இல்லை காம்பிளிமென்டரி டிக்கெட் ஏதாவது கிடைக்காதா என்று ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறார்களா?.

ஆண், பெண் என பாகுபாடில்லாமல் அனைவரும் கூடுவர்:. “ஓட்டல்களில் நள்ளிரவு ஒன்றரை மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. ஈவ்டீசிங், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், பைக்ரேஸ் ஆகியவற்றில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார். புத்தாண்டையொட்டி, ஆண்டு தோறும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டும். சுற்றுலா மையங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என இளைய தலைமுறையினர் புத்தாண்டை வரவேற்பர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மதுவிற்கும், கேளிக்கைகளுக்கும் பஞ்சமிருக்காது. கடற்கரைகளில் ஆண், பெண் என பாகுபாடில்லாமல் அனைவரும் கூடுவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், நீச்சல் தொட்டி மீது போடப்பட்டிருந்த மேடை சரிந்து உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஓட்டல்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வரும் 2011ம் புத்தாண்டை, சந்தோஷமான, அசம்பாவிதங்கள் இல்லாத புத்தாண்டாக வரவேற்கும் முயற்சியில், சென்னை போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஓட்டல் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

இரவு 8:30 மணிக்கு மேல், நீச்சல்குளங்களில் யாரையும் குளிக்க அனுமதிக்கக் கூடாது: கூட்ட முடிவில், சென்னை நகர கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களின் பிரதிநிதிகள் 100 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில், ஓட்டல்களில் இரவு 8:30 மணிக்கு மேல், நீச்சல்குளங்களில் யாரையும் குளிக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு ஒன்றரை மணிக்கு மேல் ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் பட்டாசு வெடிப்பது, வாகனங்களை சாலையில் நிறுத்தி போக்குவரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது கூடாது.ஓட்டல்களில் மேடை அமைத்து நிகழ்ச்சி நடத்த விரும்பினால், அந்தந்த பகுதி துணை கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும். புத்தாண்டு நிகழ்வின் போது, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மது அருந்தி வாகனம் ஓட்டுதல், ஈவ்டீசிங் செய்தல், வாகன ரேஸ் போன்றவற்றில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கடற்கரை சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், வரும் 31ம் தேதி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை வரையில் வாகன தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டுதல், ஈவ்டீசிங் செய்தல், வாகன ரேஸ் போன்றவற்றில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டல்களில் வெளிநாட்டினர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தும் போது, அவர்களின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார். பேட்டியின் போது, கூடுதல் கமிஷனர்கள் ஷகீல் அக்தர், சஞ்சய் அரோரா மற்றும் தென் மண்டல இணை கமிஷனர் சக்திவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

குடிமகன்களுக்கு 15 டிரைவர்கள்! போலீஸ் அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓட்டல் பிரதிநிதிதகளில், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், “புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கலந்துகொள்ளும் பெரும்பாலானவர்கள் மது அருந்துவர். சிலர் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்தால், அவர்கள் தங்கள் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க மாட்டோம். அவர்களை வீட்டில் விடுவதற்காக நாங்கள் 15 கார் டிரைவர்களை ஸ்பெஷலாக நியமித்துள்ளோம். டிரைவர்கள் அந்த வாடிக்கையாளரை அவரது வீட்டில் சென்று விட்டுவிடுவர். மறுநாள் வந்து அவர்களின் வாகனத்தை எடுத்துக் கொள்ளலாம்,” என்றார்.

குடிமகன்களுக்கு சரி, கூத்தடிப்பவர்களுக்கு என்ன ஏற்பாடு செய்வார்கள்? முன்பெல்லாம் கார்களில் வருபவர்கள் கார் சாவியை மாற்றிக் கொள்வார்களாம், அதாவது காரிலுள்ள பெண்களை மாற்றிக் கொள்வார்களாம். இப்பொழுது டிரைவர்களை மாற்றுகிறார்கள் போலும்! சில ஹோட்டல்களில் சீட்டு குலுக்கிப் போட்டு, நெம்பர்களுக்கு ஏற்றபடி தேர்ந்தெடுத்துக் கொள்வார்களாம்! மேலே சொல்லியபடி, பெண்கள் விவகாரத்திலும் அவ்வாறே ஏற்பாடு செய்து கொடுப்பார்களா?

No comments:

Post a Comment